நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான
வானிலை இன்றும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம்.ஊவா மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.நாட்டிற்கு மேலாக மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில் காற்று அதிகரித்து வீசக் கூடும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.கடல் பிராந்தியங்களில்காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 60_65 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 70_80 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.சிரேஷ்ட வானிலை அதிகாரிதேசமானிய மொஹமட் சாலிஹீன்.
Share this
EmoticonEmoticon