ஏ.பி.எம்.அஸ்ஹர் முன்னாள் இராஜாங்க.அமைச்சர் அலி ஸாஹிர்
மௌலானாவின் முயற்சியின் பயனாக இதுவரை கொழும்பில் நிர்க்கதி நிலைக்குள்ளாகி இருந்த 150 பேர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கொழும்பில் நிர்க்கதி நிலைக்கு ஆளாகி சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது இருந்த சுமார் 320பேர் ஏற்கனவே அலி ஸாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் தமது பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தொலைபேசி மற்றும் முகநூல் வாயிலாக தங்களது விபரங்களை வழங்கிய மட்டக்களப்பு அம்பாறை , திருகோணமலை , கண்டி , பதுளை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 150பேர் பொது போக்குவரத்து ஏற்பாடுகளின் மூலம் தங்களது சொந்த இடங்களுக்கு இன்று கொழும்பு ஷாலிக்கா மைதானத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களது விபரங்களை பெற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான தொடர் முயற்சிகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நேரடியாக அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக் கொடுத்ததுடன் இன்றைய தினம் விசேட பொது போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய முறைகளை பின்பற்றி சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட கெடுபிடிகள் மிகவும் இறுக்கமாகவும் , மிகவும் அவதானத்துடன் கையாளப்படுகின்ற மேல்மாகாணத்திலிருந்து குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டத்துக்கு செல்வதென்றால் பல முக்கியமானதும், இறுக்கமானதுமான சுகாதார, பாதுகாப்பு, போக்குவரத்து சம்பந்தப்பட்ட படிப்படையான செயல்முறைகளை எல்லாம் கட்டம் கட்டமாக பேணி மேல்மாகான ஆளுனர், மேல்மாகான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், கொழும்பு மாநகர மேயர், கொழும்பு மாநகர சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் அனைவருடனும் தொடர்பு கொண்டு ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை சாதுரியமாக கையாண்டதன் பயனால் இன்று பல நூற்றுக்கணக்கானவர்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக தத்தம் ஊர்களுக்கு மீண்டு சந்தோஷ பெருமூச்சுடன் அவர்களது திருப்தியை வெளிப்படுத்தியதனை அவதானிக்க முடிந்தது.இதற்காக இன்று அதிகாலை முதலே நேரடியாக களத்திலே நின்று பல்வேறு பகுதிகளிலும் இருந்தவர்களை ஒருங்கிணைத்து பொலிஸ் மற்றும் சுகாதார பிரிவினரின் நேரடி வழிகாட்டலுடன் அனுப்பி வைக்கப்படும் வரை முழு ஏற்பாடுகளை அலி ஸாஹிர் மௌலானா அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தார் இந்த 150 பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் , காத்தான்குடி கல்குடா பகுதிகளை சேர்ந்த சுமார் 44பேரும் உள்ளடங்குவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார் .
Share this
EmoticonEmoticon